அமெரிக்காவிற்கு வருகை தரும் உறவினர்களுக்கான பயண மருத்துவக் காப்பீடு

அமெரிக்காவில் வசிப்பவர்களால் அழைக்கப்படுவதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு வருகின்றார்கள்.  அவர்கள் சுற்றுலாவிற்காகவோ, ஓய்விற்காகவோ, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவோ அல்லது பலவகையான நோக்கங்களுக்காகவோ வருகின்றார்கள். உறவினர்கள் அமெரிக்காவிற்கு வருகை தரும்போது பயண மருத்துவ காப்பீட்டைக் கருத்தில் கொள்வது அவசியம்.  இது “பயணக் காப்பீடு” அல்லது “பயண மருத்துவக் காப்பீடு” என்று அழைக்கப்படுவதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் ஏனெனில் இது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மருத்துவப் பாதுகாப்பு அளிக்கிறது.

வருகை தரும் தங்களின் பெற்றோர் அல்லது தங்களது கணவன்/மனைவியின் பெற்றோருக்காக விசா மற்றும் பயண ஏற்பாடுகளைச் செய்யும்போது, அவர்களுக்காக பயண மருத்துவ காப்பீட்டை வாங்க வேண்டுமா? அப்படியெனில் அதை எங்கிருந்து வாங்குவது? மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நல்ல திட்டம் எது? என்று பல கேள்விகளும் குழப்பங்களும் எழும்.

வருகையாளர் காப்பீட்டை கண்டிப்பாக வாங்க வேண்டுமா?

உலகிலேயே அமெரிக்காவில்தான் மருத்துவத்திற்கு மிகவும் அதிகம் செலவாகும்.  ஒரு சாதாரண நோய்க்குக் கூட ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும்.  எனவே, வருகையாளர் காப்பீட்டை வாங்குவது மிகவும் புத்திசாலித்தனம்.
மேலும் விவரங்களுக்கு

சொந்த நாட்டில் வாங்குவதற்கும் அமெரிக்காவில் வாங்குவதற்குமான வேறுபாடு

வருகையாளர் காப்பீட்டை நீங்கள் உங்கள் சொந்த நாட்டிலும் வாங்கலாம் அல்லது அமெரிக்காவிலும் வாங்கலாம். சில காப்பீட்டுத் திட்டங்கள் தங்கள் சொந்த நாட்டில் விலை குறைவாக இருக்கலாம், ஆனால் அவை மற்ற நாடுகளில் அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம், நேரடியான கட்டணம் வழங்காமல் இருக்கலாம் மற்றும் நிலையான பாதுகாப்பு திட்டத்தில் மட்டுமே உள்ளடக்கியிருக்கும். அதாவது, முதலில் நீங்கள்தான் மருத்துவச் செலவிற்கான தொகையைச் செலுத்த வேண்டும். உங்களுக்கு அந்தத் தொகை பின்னர் இந்தியாவுக்கு வந்ததும் திருப்பியளிக்கப்படும். ஆனால், யதார்த்தத்தில் ஒருவரால் குறைந்த அளவு தொகையையே தன் கையிலிருந்து செலவழிக்க முடியும், மொத்தமாக $30,000 – $40,000 என செலவழிக்க முடியாது. எனவே, உங்களது சொந்த நாட்டிலேயே காப்பீட்டை வாங்குவது அவ்வளவு சரியான முடிவல்ல.

இந்தியாவில் வாங்குதல் அமெரிக்காவில் வாங்குதல் – ஒரு ஒப்பீடு

பல பயண முகவர்கள் விமானப்  பயணச்சீட்டுகாக நீங்கள் அவர்களை அணுகும்போது பயணக் காப்பீட்டையும் விற்க முயற்சிப்பார்கள். இருப்பினும், அவர்கள் பொதுவாக ஒரே ஒரு வகையான காப்பீட்டுத் திட்டத்தைத்தான் பெரும்பாலும் காட்டுவார்கள். அது உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.  பயணக்  காப்பீட்டைப் பற்றிய அறிவு, பயிற்சி, நிபுணத்துவம் அல்லது காப்பீடு விற்பதற்கான உரிமம் கூட அவர்களிடம் இருக்காது.  அவர்களால் வெவ்வேறு திட்டங்களையும் அவற்றின் சாதக பாதகங்களை கூட முறையாக விளக்க முடியாது; உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்களால் உங்களுக்கு உதவ முடியாது, சுருக்கமாகச் சொன்னால் காப்பீடு எந்த விவரமும் அறிந்தவர்களாக இருக்கமாட்டார்கள்.

அமெரிக்காவிற்கு வரும்  வெளிநாட்டு வருகையாளர்களுக்கான பயணக் காப்பீட்டை வழங்குவதில் Insubuy நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது. எனவே, Insubuy போன்ற நம்பிக்கைக்குரிய முகவர் மூலம் பயணக் காப்பீட்டை வாங்குவது நல்லது. அவர்கள் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக  இந்த வணிகத்தில் உள்ளனர் மற்றும் இந்தத் துறையில் இவர்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றார்கள். Insubuy.com இல், நீங்கள் பல காப்பீட்டுத் திட்டங்களுக்கான உத்தேச விலை மற்றும் விவரங்களை உடனடியாகப் பெறலாம் மற்றும் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்குத் தேவையான காப்பீட்டை இணையத்தில் உடனடியாக வாங்கலாம். கட்டணமில்லா தொலைபேசி  எண் (866) INSUBUY, அல்லது +1 (972) 985-4400 அல்லது வாட்ஸ்அப் வழியாக +1 (972) 795-1123 என்ற எண்களில், வாரத்தில் ஏழு நாட்களும் தொடர்பு கொண்டு  உரிமம் பெற்ற அனுபவம் வாய்ந்த காப்பீட்டு நிபுணர்களுடன் நீங்கள் பேசலாம்.

கண்ணில் படுகின்ற விலை குறைவான திட்டத்தை நீங்கள் நம்பி வாங்க வேண்டாம்.  எல்லா திட்டங்களும் ஒரே மாதிரியாக செயல்படும் அல்லது ஒரே பாதுகாப்பை வழங்குவதாகக் கருத வேண்டாம். நீங்கள் அதற்குரிய விவரங்களை அறிந்து சரியான முடிவை எடுங்கள்.

பயண மருத்துவ காப்பீட்டு வகைகள்

பல காப்பீட்டுத் திட்டங்கள் சந்தையில் கிடைக்கின்றன ஆனாலும் அவை அனைத்தும் இரண்டு வகைகளின் கீழ்தான் வரும்:

  • நிலையான காப்பீட்டை வழங்கும் திட்டங்கள்:
    இந்தத் திட்டங்கள், எல்லாவிதமான நடைமுறைக்கும் ஒரு நிலையான தொகையை மட்டுமே வழங்குகின்றன,  மேலும் செலவின் தொகை இதைவிட அதிகமாக இருந்தால், மீதித் தொகையை நீங்கள்தான் செலுத்த வேண்டும். இவை மிகக் குறைந்த விலையுடையவையாக இருக்கும் ஆனால் போதுமானதாக இருக்காது, சாதாரண சிறிய நோய்களுக்கு அல்லது ஆரோக்கியமான மக்களுக்குக் கூட இவை பரிந்துரைக்கப்படுவதில்லை.

    இந்தியா போன்ற சில வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்ட பயணிகளுக்கு மட்டுமே இந்த நிலையான காப்பீட்டை வழங்கும் திட்டங்களை வழங்குகின்றன.  அவர்கள் அதை விரிவான பாதுகாப்பைத் தரும் திட்டங்கள் என்று அழைத்தாலும், அவற்றில் பல துணை வரம்புகள் அடங்கியிருக்கும். எனவே அந்தத் திட்டங்களும் இறுதியில் நிலையான காப்பீட்டை வழங்கும்திட்டங்களாகவே இருக்கும்.

    இத்தகைய திட்டங்கள் விரிவான பாதுகாப்புத் திட்டங்களை விட சுமார் இரண்டு முதல் மூன்று மடங்கு மலிவானவை.  உண்மையிலேயே, இந்தத் திட்டங்கள் பலருக்கும் போதுமானதாக இருந்தால், யாரும் விரிவான பாதுகாப்புத் திட்டங்களை வாங்க விரும்ப மாட்டார்கள், அத்தகைய விரிவான பாதுகாப்புத் திட்டங்கள் சந்தையிலும் இருந்திருக்காது.

    பிரபலமான சில நிலையான தொகை வழங்கும் திட்டங்கள்:

ஏற்கனவே இருக்கும் நிபந்தனைகள்

வயதானவரகளில் பலர் ஏற்கனவே சில உடல் பிரச்சனைகளைக் கொண்டிருப்பார்கள். அத்தகையவர்களின் மகனோ மகளோ அல்லது அவர்களை அமெரிக்காவிற்கு அழைக்கக்கூடியவர்களோ யோசிக்கக்கூடிய ஒரு விசயம் என்னவெனில் இத்தகைய பயணக் காப்பீடுகளில் ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காப்பீடும் அடங்குமா என்பதுதான். பொதுவாக, வழக்கமான மருத்துவப் பராமரிப்புகள் அல்லது ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான செலவுகள் போன்றவை பயணக் காப்பீடுகளில் உள்ளடங்காது என்ற போதிலும், அத்தகைய செலவுகளை உள்ளடக்கும் பயணக் காப்பீட்டுத் திட்டங்களும் கிடைக்கின்றன.

ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான செலவையும் உள்ளடக்கும் சிறந்த காப்பீட்டுத் திட்டங்கள்.

வருகையாளர் காப்பீட்டை வாங்குதல்

பயண மருத்துவ காப்பீட்டை வாங்குவது மிகவும் எளிதானது. முதலில் insubuy.com என்ற இந்த இணையதளத்தில் நுழைந்து பின் உங்களுக்கேற்ற திட்டங்களைத் தேடுவதற்கான விசயங்களை உள்ளிடுங்கள். நீங்கள் அனைத்து விவரங்களையும் ஆன்லைனில் முழுமையாக ஆராய்ந்து ஐந்து நிமிடங்களுக்குள் உடனடியாக வாங்கலாம். வாங்கிய உடனே ஒரு அடையாள அட்டை மற்றும் பிற பாலிசி ஆவணங்கள் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.

வருகையாளர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ நீங்கள் வருகையாளர்கள் காப்பீட்டை வாங்கலாம் என்றாலும், அவர்கள் வருவதற்கு முன்பே வாங்குவதே மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அவர்களின் பயணத்திற்கான பாதுகாப்பு காப்பீட்டையும் அதில் சேர்த்திடுங்கள். வருகையாளர் ஏற்கனவே அமெரிக்காவில் இருந்தால் மேரிலேண்ட் போன்ற சில மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் உள்ளன அதாவது அங்கிருப்பவர்களை பெரும்பாலான வருகையாளர் காப்பீடுளை வாங்க அனுமதிப்பதில்லை.

மிக முக்கியமாக, வருகையாளர்கள் அமெரிக்காவிற்கு வரும்போது, அவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு குடும்பத்தைச் சந்திக்கிறார்கள்.  அவர்கள் சுற்றுலா, நண்பர்கள் மற்றும் பிற உறவினர்களை சந்திப்பது என பரபரப்பாகி விடுகிறார்கள். வந்தவர்களில் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் அல்லது காயமடையும் வரை அவர்களில் சிலர் காப்பீட்டை வாங்குவதை முற்றிலும் மறந்து விடுகிறார்கள்.  நிச்சயமாக, அந்த நேரத்தில் வருகையாளர்க் காப்பீட்டை வாங்குவது மிகவும் தாமதமானது, ஏனெனில் எந்தக் காப்பீட்டுத் திட்டமும் நீங்கள் ஏற்கனவே செய்த செலவுகளையோ கண்டிப்பாக செலவாகும் என்ற செலவுகளையோ ஈடுசெய்யாது. அத்தகைய செலவுகளை ஈடுசெய்வது நேரடியாகவே இழப்பு  என்பதால் எந்தவொரு காப்பீட்டு நிறுவனமும் அதைச் செய்யப் போவதில்லை. நோய் வந்தபின் அதற்கான செலவுகளை ஈடுசெய்யும் காப்பீடுகள் உண்டு என்று சில நபர்கள் வலைப்பதிவுகளில் எழுதும் போலியான அப்பட்டமான பொய்களை நீங்கள் நம்ப வேண்டாம். எந்தவொரு காப்பீட்டு நிறுவனமும் அத்தகைய காப்பீட்டை வழங்குவதில்லை.

தனித்தனியே வாங்குதலும் அனைவருக்கும் சேர்த்து வாங்குதலும்

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து வந்தால், உதாரணத்திற்கு உங்கள் பெற்றோர்கள், அவர்கள் இருவருக்கும் ஒருங்கிணைந்த பாலிசியை வாங்கலாம் அல்லது ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாலிசியையும் வாங்கலாம். எப்படி வாங்கினாலும் பிரீமியம் தொகை ஒன்றேதான்.  இருப்பினும், நீங்கள் தனித்தனியாகத் திட்டங்களை வாங்கினால், பயணத் திட்டங்கள் மாறினாலோ ஒரு நபருக்கான நீட்டிப்பு அல்லது ரத்து செய்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.  பெரும்பாலும், வருபவர்களில் அம்மா நீண்ட காலம் தங்குவார், ஆனால் அப்பா சொந்த நாட்டில் வேலைகள் இருப்பதால் அல்லது வேறு காரணங்களுக்காக ஊருக்குத் திரும்ப விரும்புகிறார் என்றால் தனித்தனியே காப்பீட்டை வாங்குவது நல்லது.

English     ગુજરાતી     हिंदी     मराठी     తెలుగు   العربية

How useful was this post?

Click on a star to rate it!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

RELATED TOPICS

For visitors, travel, student and other international travel medical insurance.

Visit insubuy.com or call +1 (866) INSUBUY or +1 (972) 985-4400